உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 108 பேருக்கு சிறந்த மருத்துவர் மருத்துவ சேவைக்கான விருது

108 பேருக்கு சிறந்த மருத்துவர் மருத்துவ சேவைக்கான விருது

கோவை:தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், இந்திய மருத்துவ சங்கம் (கோவை), நேரு நகர் லயன்ஸ் சங்கம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில், சிறந்த மருத்துவர் விருது மற்றும் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கும் விழா, இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்ட கவர்னர் டாக்டர் நித்யானந்தம் தலைமை தாங்கி, சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கினார். ஐ.எம்.ஏ., போர்ட் ஆப் இந்தியா தலைவர் மருத்துவமனை ரவிக்குமார், ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் பிரியா கார்த்திக் பிரபு, தேசிய செயலாளர்டாக்டர் கார்த்திக் பிரபு, செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் சங்கங்களின் முன்னாள் கவர்னரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பழனிசாமி, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.இதில், 35 சங்கங்கள் சார்பில், மனநல மருத்துவர் மோனி உட்பட, 97 டாக்டர்களுக்கும், 11 மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும் என மொத்தம், 108 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது மற்றும் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது.லயன்ஸ் வட்டார தலைவர்கள் மோகன்ராஜ், ஸ்ரீதர், திவாகர், வெங்கடேஸ்வரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய செயலாளர் செந்தில் குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி