மேலும் செய்திகள்
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
12 hour(s) ago
இளநீர் விலையில் மாற்றமில்லை
12 hour(s) ago
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
12 hour(s) ago
யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு
12 hour(s) ago
கோவை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், கோவையில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்கவுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ல் துவங்கி 22 ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4 ல் துவங்கி 25 ம் தேதி வரையும் நடந்தது. அதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 ம் தேதி துவங்கி, ஏப். 8 ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்கவுள்ளது. இப்பணிக்காக கோவையில் கணபதி சி.எம்.எஸ். தனியார் பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிக் பள்ளி என மூன்று மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் கோவையில் 2 மையங்கள், பொள்ளாச்சியில் ஒரு மையம் என மூன்று மையங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் முதல்நாளில் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். அதன்பிறகு, ஆன்லைனில் மதிப்பெண்கள் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் முடிந்து திட்டமிட்டபடி மே 10 ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago