உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுடன் முதல்வர் முகாம் பெறப்பட்ட 1,450 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாம் பெறப்பட்ட 1,450 மனுக்கள்

உடுமலை;அனிக்கடவு கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மக்களிடமிருந்து, 1,450 மனுக்கள் பெறப்பட்டன.குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு கிராமத்தில், நேற்று 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. இதில், கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, வீதம்பட்டி, வாகத்தொழுவு, அனிக்கடவு ஊராட்சி மக்கள் மனுக்களை வழங்கினர்.இதில், வருவாய்த்துறையிடம், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அதிகளவு மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக மனுக்கள் வழங்கினர்.மின்வாரியம் சார்பில், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக மனுக்கள் பெறப்பட்டது. முகாமில், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில், மொத்தம், 1,450 மனுக்கள் பெறப்பட்டன.உடுமலை கோட்டாட்சியர் ஐஸ்வந்த்கண்ணன், தாசில்தார் சுந்தரம், பி.டி.ஓ., நாகலிங்கம், அனிக்கடவு ஊராட்சி தலைவர் அழகம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ