உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு ஆண்டில் இ.எஸ்.ஐ.யில் 1500 பிரேத பரிசோதனை

ஒரு ஆண்டில் இ.எஸ்.ஐ.யில் 1500 பிரேத பரிசோதனை

கோவை:கடந்த ஒரு ஆண்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 1500 உடல்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுகோவை சிங்காநல்லுாரில் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கடந்த, 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரேத பரிசோதனை துவங்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில் இங்கு, 1500 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இ.எஸ்.ஐ., மருத்துவமனை சட்ட மருத்துவத்துறை பேராசிரியர் மனோகரன் கூறியதாவது:கோவை இ.எஸ்.ஐ., மருத்துவனையில், கடந்த ஒரு வருடத்தில், 1500 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 150 பாலியல் குற்ற வழக்குகளுக்கு (போக்சோ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.4 உதவி பேராசிரியர்கள் என மொத்தம், 5 சட்டம் சார்ந்த மருத்துவர்கள் இங்கு உள்ளனர். தினமும் சராசரியாக, 10 முதல், 15 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியும். தற்போது, 29 உடல்களை வைக்கும் குளிர்சாதன வைப்பறை வசதி உள்ளது. பிரேத பரிசோதனை அரங்கில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை என, 2 இடங்களிலும் பிரேத பரிசோதனை நடைபெறுவதால் விரைவாக பரிசோதனை முடிந்து உடல்களை உறவினர்கள் பெற்று செல்ல முடிகிறது. மேலும் பிரேத பரிசோதனை சான்று, 24 மணி நேரத்துக்குள் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை