உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பு பணியில் 1,941 போலீசார் கோவையில் போக்குவரத்து மாற்றம்

பாதுகாப்பு பணியில் 1,941 போலீசார் கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவை;முதல்வர் வருகையையொட்டி, 1,941 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.கோவைக்கு இன்று வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் அரசு கலைக்கல்லுாரியில் 'தமிழ் புதல்வன்' திட்டம் துவக்கிவைத்தல், உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.அவரது வருகையையொட்டி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், நான்கு போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், 19 உதவி கமிஷனர்கள், 45 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 1,941 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவிநாசி ரோடு வழியாக முதல்வர், அமைச்சர்கள் பயணிப்பதால், பொது மக்கள் இந்த வழித்தடத்தில் செல்வதை தவிர்த்து, மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் ரோடு, 100 அடி ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு வழியாக ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள், சத்தி ரோடு, கணபதி, சரவணம்பட்டி வழியாக காளப்பட்டி ரோடு, வீரியம்பாளையம் ரோடு, தொட்டிபாளையம் பிரிவு வழியாக அவிநாசி ரோட்டை அடையலாம்.ராமநாதபுரம் மற்றும் சுங்கம் பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனை, பெரியகடை வீதி, டவுன்ஹால் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள், சுங்கம் வாலாங்குளம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக செல்லலாம்.காலை, 6:00 முதல் மாலை, 4:00 மணி வரை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது. போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி