| ADDED : மே 09, 2024 11:15 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி, 33. தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சென்னையில் தங்கி, அங்குள்ள தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், நந்தினி தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கினார். அப்போது, நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்கவே, அவர் எழுந்து பார்த்த போது, அங்கு இருவர் தப்பி ஓடினர். அவர்கள் மணி பர்சை திருடி சென்றனர் என தெரியவந்தது.இதுகுறித்து நந்தினி, கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த அபூலன் என்கிற நூர் முகமது, 23, கரட்டுமேடு பகுதியை சேர்ந்த லட்சுமணன், 28, ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். --