உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

கோவை, : தமிழக அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், ஊரக பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வைப்பு நிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லதுமகளிர் ஊர் நல அலுவலர்களை நேரில் சென்று, முதிர்வுத் தொகை பெறுவதற்காக, வைப்பு நிதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.நகர்ப்புற பகுதியில் வசிப்பவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.நேரில் செல்லும்போது, 18 வயது பூர்த்தியான பெண் குழந்தையின், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளியின் தனி வங்கி கணக்கு புத்தக நகல், வைப்பு நிதி பத்திரம் அசல், நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு சென்று, கருத்துரு சமர்ப்பிக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை