உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா, பான்பராக்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா, பான்பராக்

கோவை;ரயிலில் கடத்தி வரப்பட்ட, 25 கிலோ குட்காவை பிடித்த போலீசார், 13 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.கோவை ரயில்வே ஸ்டேஷனில், கோவை மாநகர போலீசார், ரயில்வே போலீசார் வட மாநிலத்திலிருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. இதில், 25 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியந்தது. வடமாநிலங்களில் இருந்து இதை கொண்டு வந்த, சந்தன்குமார் ஷா, 22, மணீஸ்குமார், 20, ரியாஸ், 23, இர்பான், 30, சலீம், 24 உட்பட்ட, 13 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பீகார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அங்கிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ