உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரிக்கு 25 லட்சம் ரூபாய் முன்னாள் மாணவர்கள் உதவி

கல்லுாரிக்கு 25 லட்சம் ரூபாய் முன்னாள் மாணவர்கள் உதவி

கோவை;துடியலுார், வட்ட மலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், 1999ல் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின், 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நடந்தது.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், இந்தியா மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள், 125க்கும் மேற்பட்டோர், குடும்பத்துடன் பங்கேற்றனர்.முன்னாள் மாணவர்கள் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கு ஊக்கம் தருவதற்காக, ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தங்கள் கல்லுாரி கால அனுபவத்தை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களையும், துறைத்தலைவர்களையும் கவுரவித்தனர்.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குனர் அலமேலு, முதல்வர் (பொறுப்பு) சவுந்தர்ராஜன், முன்னாள் மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ், செயலாளர் செந்தில் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை