உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை சரிவு

அரசு பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை சரிவு

பொள்ளாச்சி : அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டுகளை ஒப்பிடுகையில், சராசரியாக, 25 சதவீதம் அளவில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், 2024-25ம் கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, பேரணி, கலைநிகழ்ச்சிகள், அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.அதேபோல, துவக்கப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை, மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க, உடனடி சேர்க்கையும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டினை ஒப்பிடுகையில், சராசரியாக, 25 சதவீதம் அளவில் மாணவர் சேர்க்கை குறைந்தே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:ஒவ்வொரு கல்வியாண்டும், துவக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளை, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க முனைப்பு காட்டுகின்றனர். இதனால், மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.கடந்தாண்டு ஒவ்வொரு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும், 6ம் வகுப்பில், 75 சதவீதம் அளவில் மாணவர் சேர்க்கை இருந்த நிலையில், இக்கல்வியாண்டு, 50 சதவீதமாக உள்ளது. அதேநேரம், குறிப்பிட்ட சில துவக்கப் பள்ளியில், வழக்கத்துக்கு மாறாக, மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி