தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது.தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,),பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்சி., கணிதம் ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.அதன்பின், கடந்த மே 27ம் தேதி, தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 6,032 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதனைத்தொடர்ந்து, கடந்த மே 30ம் தேதி, சிறப்பு பிரிவினருக்கும், கடந்த 10 முதல் 15ம் தேதி வரை பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 250 இடங்கள் நிரப்பப்பட்டன. இவற்றில், பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்சி., கணிதம் ஆகிய பாட பிரிவுகளில் அதிக இடங்களும், பி.காம்., (பி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்களும் காலியாக உள்ளன.இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று நடக்கிறது என, கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தெரிவித்துள்ளார்.