உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.80 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 நாள் போலீஸ் கஸ்டடி

ரூ.80 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 நாள் போலீஸ் கஸ்டடி

கோவை;நிதி நிறுவனம் நடத்தி, 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரிடம், மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் திலக் தீபக்,40. இவர், பேனியன் டிரீ மார்க்கெட்டிங் என்ற பெயரில், ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில், 2,000 ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 400 ரூபாய் விகிதம், 15 மாதத்தில், 6000 ரூபாயும், 4,000 ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 800 ரூபாய், 15 மாதத்தில் 12,000 ரூபாயும் திருப்பி தருவதாக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் டெபாசிட் செய்தனர். ஆனால், ஒரு சில மாதங்கள் மட்டும் பணம் கொடுத்து விட்டு ஏமாற்றினர்.பாதிக்கப்பட்டோர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிந்து விசாரிக்கையில், புகார் அளித்த, 71 பேரிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட திலக் தீபக்கிடம், போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை