மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 2024-25ம் கல்வியாண்டுக்கான பட்டயப்படிப்பு சேர்க்கை துவங்கியுள்ளது. சேர்க்கைக்கான அனைத்து செயல்பாடுகளும் 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை,http;//tnau.ucanapply.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்ப கட்டணம் 200 ரூபாயும், எஸ்.சி.,எஸ்.டி., எஸ்.சி.ஏ., பிரிவினர் 100 ரூபாய் செலுத்தவேண்டும்.இதுகுறித்து, துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது: வேளாண்மை படிப்பு குமுளூர் வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 250 இடங்களும், வேளாண்மை தமிழ்வழி வம்பன் தேசிய பயறு ஆராய்ச்சி நிலையத்தில் 80 இடங்களும், தோட்டக்கலை பிரிவில் பேச்சிப்பாறை கல்லுாரியில் 80 இடங்களும், வேளாண் பொறியியல் குமுளூரில் 40 இடங்களும் உள்ளது.இவை தவிர, தோட்டக்கலை பிரிவில், மாதவரம், தளி, ரெட்டியார்சத்திரம் கல்லுாரிகளில் 50 வீதம் 150 இடங்களும் உள்ளன. இணைப்பு கல்லுாரிகளில், வேளாண் பிரிவில் 520 இடங்களும், தோட்டக்கலை பிரிவில் 170 இடங்களும் உள்ளன.விண்ணப்ப பதிவு பணிகள் துவங்கியுள்ள நிலையில், 30 நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு போன்று,பட்டயப்படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் இத்துறையில் அதிகம் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago