உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய அங்கன்வாடி மையம் கட்ட 41.10 லட்சம் ரூபாய் நன்கொடை

புதிய அங்கன்வாடி மையம் கட்ட 41.10 லட்சம் ரூபாய் நன்கொடை

கோவை;புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுதல், புதுப்பிப்புக்கு ரூ.41.10 லட்சம், கோவை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.கோவை சாய்பாபா காலனி, கே.கே.புதுாரில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டவும், ஜவஹர்புரம் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டது.இப்பணிகளுக்காக ரூ.41.10 லட்சத்தை, வெளிநாட்டில் பணியாற்றி வரும் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ்வெங்கட்ராமன், அவரது சகோதரர் லட்சுமிநாராயணன் குடும்பத்தினர் வழங்கினர். இதற்கான காசோலை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி