உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளவி கொட்டியதில் 5 பெண்கள் காயம்

குளவி கொட்டியதில் 5 பெண்கள் காயம்

ஆனைமலை;ஆனைமலை அருகே, விவசாய பண்ணை தோட்டக்கலைத்துறை வளாகத்தில் குளவி கொட்டியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.ஆனைமலை அருகே, ஆழியாறு விவசாய பண்ணை தோட்டக்கலைத்துறை வளாகத்தில் தென்னங்கன்றுகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அங்கு இருந்த குளவிக்கூடு கலைந்து, பண்ணையில் வேலை பார்த்த பெண்களை சுற்றி வளைத்து கொட்டியது. அதில், காயமடைந்த கனிதுரட்சி,50, லட்சுமி,59, முத்தம்மாள்,58, ராஜேஸ்வரி,53, துரட்சி,50, என ஐந்து பேரும், கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை