உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆறு மாதங்களில் ரூ.50 லட்சம் அபராதம்

ஆறு மாதங்களில் ரூ.50 லட்சம் அபராதம்

கோவை;கடந்த ஆறு மாதங்களில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதற்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.கோவை மாநகராட்சி, 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பிளாஸ்டிக் பயன்பாடு, டெங்கு கொசு வளர்ப்புக்கு வழிவகை செய்தல், குப்பைகளை கொட்டுதல் ஆகிய வற்றுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகை செய்யும் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு ரூ.31 லட்சம், டெங்கு கொசு வளர்ப்புக்கு வழிவகை செய்ததற்கு, ரூ.3 லட்சம், குப்பை கொட்டியதற்கு, ரூ.16 லட்சம் என, மொத்தம், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப்பது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆறு மாதங்களில் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அபராதம் விதிக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ