உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ நிறுத்துவதில் மோதல்: அரிவாள் வெட்டில் 7 பேர் காயம்

ஆட்டோ நிறுத்துவதில் மோதல்: அரிவாள் வெட்டில் 7 பேர் காயம்

பாலக்காடு;பாலக்காடு அருகே, ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், அரிவாளால் வெட்டியதில், 7 பேர் காயமடைந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கல்லேக்காடு மேட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் குமாரன், 50. இவரது தாய் கமலம், 70, மகன் கார்த்திக், 23, சகோதரன் நடராஜன், 43, தம்பியின் மனைவி செல்வி, 38, சகோதரரின் மகன்கள் ஜிஷ்ணு, 20, ஜீவன், 17, ஆகியோர் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.இவர்களது வீட்டில் அருகே, சுப்ரமணியன், அவரது மகன்கள் ரமேஷ், ரதீஷ், சகோதரி தங்கம் ஆகியோர் வசிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜீவனின் நண்பருடைய ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்துவதில், இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரதீஷ், ரமேஷ் இருவரும், நேற்று காலை அரிவாளுடன் வந்து, குமாரன் குடும்பத்தினர் ஏழு பேரையும் வெட்டி காயப்படுத்தினர்.கழுத்து பகுதியில் வெட்டு பட்ட குமாரனை, ஆபத்தான நிலையில், திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்த மற்றவர்கள், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இச்சம்பவத்துக்கு பின் ரதீஷ் தப்பியோடி விட்டார். சிறு காயங்களுடன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் ரமேஷ் சிகிச்சை பெறுகிறார்.பாலக்காடு டவுன் மேற்கு போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ