உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணை நாய் கடித்ததால்  உரிமையாளர் மீது வழக்கு பதிவு

பெண்ணை நாய் கடித்ததால்  உரிமையாளர் மீது வழக்கு பதிவு

கோவை:ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை நாய் கடித்ததால், அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பெ.நா.பாளையம் அருகேயுள்ள ஆர்.வி., நகரை சேர்ந்த அருண் என்பவர் மனைவி சிந்து,35, காந்திபுரத்திலுள்ள தனது தாயார் வீட்டுக்கு கடந்த 14ம் தேதி வந்தார். தாயாரை பார்த்து விட்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் பஸ் ஏறுவதற்கு நடந்து சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இசாக்பாபு,60, என்பவர் , தனது வளர்ப்பு நாயை ரோட்டில் அழைத்து சென்ற போது, திடீரென சிந்து மீது பாய்ந்து அவரது வலது கையை கடித்து குதறியது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார்.இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். சிந்துவை குன்னுார் அழைத்து சென்று நாய்கடிக்கு ஊசி போட வைத்தார். ரத்னபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வளர்ப்பு நாயின் உரிமையாளர் இசாக் பாபு மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை