உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குட்கா விற்ற ஒருவர் கைது; 128 கிலோ குட்கா பறிமுதல்

குட்கா விற்ற ஒருவர் கைது; 128 கிலோ குட்கா பறிமுதல்

தொண்டாமுத்தூர்:மாதம்பட்டியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட, ஒருவரை போலீசார் கைது செய்து, 128 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.பேரூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாதம்பட்டியில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்த போது, 128 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த திருக்குமார்,33 என்பவரை பேரூர் போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து, 128 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி