உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் திடீர் பள்ளம் வாகன ஓட்டுநர்கள் திணறல்

ரோட்டில் திடீர் பள்ளம் வாகன ஓட்டுநர்கள் திணறல்

வால்பாறை:ஊசிமலை செல்லும் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட். இங்கிருந்து அக்காமலை வழியாக, ஊசிமலை செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது.தற்போது, ஊசிமலை எஸ்டேட்டில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் வரையிலான ரோடு, நகராட்சி சார்பில் சீரமைக்கும் பணி நடக்கிறது.இந்நிலையில், ரோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஊசிமலை ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, மழை நீர் பொங்கி வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''ஊசிமலை -- வெள்ளமலை எஸ்டேட் வரையிலான, 13 கி.மீ., துாரம் உள்ள ரோடு, சீரமைக்கம் பணி நடக்கிறது. மழையின் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ரோடு சீரமைக்கும் பணியின் போது, ஊசிமலை ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளம் சீரமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை