| ADDED : ஜூலை 07, 2024 10:15 PM
கோவை:பாதுகாப்பு உபகரணமின்றி பணிபுரிந்த வாலிபர், கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடக்கிறது.சிவானந்தா காலனியை சேர்ந்த பரந்தாமன், 38 மனைவி சரண்யா,36. குடும்ப பிரச்னை காரணமாக எட்டு மாதங்களாக சரண்யா, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.'பேப்ரிகேசன்' தொழில் செய்து வந்த பரந்தாமனை, சலீம் என்பவர் நேற்று முன்தினம் வேலைக்கு அழைத்துள்ளார். ரத்தினபுரி, டாடாபாத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் பரந்தாமன், ரஞ்சித், நாகராஜ், தாமோதரன் ஆகியோர், பணி செய்துகொண்டிருந்தனர்.எதிர்பாராத விதமாக, கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்த பரந்தாமனை, உடன் பணிபுரிபவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பரந்தாமன் உயிரிழந்தார். தகவல் அறிந்த சரண்யா, ரத்தினபுரி ஸ்டேஷனில் புகார் அளித்தார். பாதுகாப்பு உபகரணங்களின்றி பரந்தாமன் பணிபுரிந்ததாக,, சலீம் மற்றும் கட்டட உரிமையாளர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.