உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்பன் கோவிலில் ஆடி உற்சவம்

ஐயப்பன் கோவிலில் ஆடி உற்சவம்

கோவை;ராம் நகர் ஐயப்பன் கோவிலில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு, நாளை முதல் வரும் 16ம் தேதி தேதி வரை தினமும் மாலை, ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.நாளை முதல் வரும் 7ம் தேதி வரை, ஆங்கரை ரங்சாமி தீட்சிதரின் வால்மீகி ராமாயணம்; வரும் 8ம் தேதி மாலை 5:30 மணிக்கு மைதிலி ரங்கநாதன் குழுவினரின் நாராயணீயம்; வரும் 9ம் தேதி, மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை தேவி மகாத்மியம், இரவு 7:00 மணிக்கு, ருத்ரன் அருண்குமாரின் வந்தாள் சென்றாள் - கோதை; வரும் 10ம் தேதி, இரவு 7:00 மணி முதல் சபர்பன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நாம சங்கீர்த்தனம்; வரும் 11ம் தேதி இரவு 7:00 மணி முதல் சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி மாணவர்களின் நாம சங்கீர்த்தனம்; வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கிருஷ்ண ஜகன்னாதனின் அபிராமி அந்தாதி; வரும் 15ம் தேதி பூர்ணிமா, ஸ்ரீகாந்த்தின் பிக்ஷு கீதா ஹரிகதா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.இந்த ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று இறையருள் பெற, கோவில் நிர்வாகக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை