உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 மாதங்களில் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது

4 மாதங்களில் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது

- நமது நிருபர் -கோவை டி.ஐ.ஜி.,சரவணசுந்தர் கூறியதாவது:போலீசில் நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம்களில்,சிவில் விவகாரம் தொடர்பாக புகார்கள் அதிகளவில் வருகிறது. விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து விட்டது.கடந்த, 2023ம் ஆண்டில் ஜன., முதல் ஏப்., மாதம் வரை வாகன விபத்தில், 819 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் ஏப்., மாதம் வரை விபத்தில், 665 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து உயிர் இழப்பு குறைந்த போதிலும்,வாகனங்கள் விபத்து அதிகமாகவே இருக்கிறது.கோவை சரகத்தில், 6,400 கிராமங்கள் இருக்கிறது.இந்த பகுதிகளை கண்காணிக்க 36,173 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. ஒரே ஆண்டில்,2 ஆயிரம் கேமராக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டது. கோவை சரக அளவில், 38 செக்போஸ்ட்களில் கண்காணிப்பு பணி நடக்கிறது.இதில்,8 செக்போஸ்ட்களில் நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பாட்டு அறை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை