உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை மலைப்பாதையில் கோவில் பஸ்கள் உரசி விபத்து

மருதமலை மலைப்பாதையில் கோவில் பஸ்கள் உரசி விபத்து

வடவள்ளி;மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில், தேவஸ்தான பஸ்கள் ஒன்றுக்கொன்று உரசி விபத்துக்குள்ளானது.மருதமலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு வாகனங்கள் செல்ல, 2.4 கி.மீ., தொலைவிற்கு மலைபாதை அமைக்கப்பட்டுள்ளது.மருதமலை தேவஸ்தானம் மூலம் இயக்கப்படும் மூன்று தேவஸ்தான பஸ்கள் மூலம், பக்தர்கள் மலை மேல் உள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர். வார விடுமுறை தினமான நேற்று, மருதமலை கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது, காலை, 11:00 மணிக்கு, மேலிருந்து கீழே இறங்கிய பஸ்சும், மேலே சென்ற பஸ்சும் இடும்பன் கோவில் வளைவில் திரும்பும் போது, ஒன்றுக்கொன்று உரசி விபத்துக்குள்ளானது. இரு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பக்தர்கள் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ