| ADDED : ஜூலை 08, 2024 12:37 AM
கோவில்பாளையம்;தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய நடைபாதை கடைகளால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, பொதுத்துறை வங்கி ஆகியவை உள்ளன.இங்கு ரோட்டின் கிழக்குப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மருத்துவமனையின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் படும் சிரமத்தை கோவில்பாளையம் போலீசார் கண்டு கொள்வதில்லை. பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. 'தள்ளுவண்டி மற்றும் தற்காலிக கடைகளை அகற்ற வேண்டும். அல்லது சாலையில் இருந்து மேலும் ஒதுக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய அளவில் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது' என அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.