உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியின்றி பயிற்சி மையங்களை இயக்கினால் நடவடிக்கை: கலெக்டர்

அனுமதியின்றி பயிற்சி மையங்களை இயக்கினால் நடவடிக்கை: கலெக்டர்

கோவை : கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான இல்லங்கள், மனநல காப்பகங்கள் பதிவுச்சான்று அல்லது அங்கீகாரம் பெறாமல் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா பயிற்சி நிறுவனங்கள், ஒருமாத காலத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ன் படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சாரா நிறுவனங்கள், தங்கள் விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து, அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச்சான்று பெற்றிட வேண்டும். அப்படி பதிவுச்சான்று பெறாமல் இயங்கும், அரசு சாரா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ