உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை

தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தரிசு நிலத்தை, விவசாய நிலமாக மாற்றும் திட்டத்தை வேளாண்துறை செயல்படுத்தி வருகிறது.தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்படி, பன்னிமடை மற்றும் நஞ்சுண்டாபுரம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நீண்ட நாட்களாக விவசாயம் செய்யாமல், தரிசாக உள்ள நிலங்களை கண்டறிந்து, சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றுவது ஆகும்.இந்த வகையில், 10 முதல், 15 ஏக்கர் தரிசாக உள்ள நிலம் அதில் குறைந்தபட்சம் எட்டு விவசாயிகள் உள்ளவாறு தொகுப்பு தேர்வு செய்து, அதில் வேளாண் பொறியியல் துறை வாயிலாக ஆழ்துளை கிணறு அமைத்து, மின்சார இணைப்புடன் மோட்டார் பொருத்தி, நீர்பாசன வசதி ஏற்படுத்துவது, அந்நிலங்களில் முட்புதர்கள் அகற்றி, சமம் செய்து, செயல் விளக்க திடல், மரக்கன்று நடவு செய்தல் போன்ற செயல்பாடுகள், அரசு மானியத்தில் செய்து, வேளாண் நிலங்களாக மாற்றும் திட்டமாகும்.இதற்கான தொகுப்பு நில தேர்வு, செயல்பாடுகள் கோவை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) விஜயகல்பனா தலைமையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலர் கோமதி, துணை வேளாண்மை அலுவலர் விஜய கோபால், உதவி வேளாண் அலுவலர்கள் சையது நூர் முகமது, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை