உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்வையற்றவராக நடிக்கும் அந்தகன் பார்க்க அழைக்கிறார் நடிகர் பிரசாந்த்!

பார்வையற்றவராக நடிக்கும் அந்தகன் பார்க்க அழைக்கிறார் நடிகர் பிரசாந்த்!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 'அந்தகன்' திரைப்படம் குறித்த, பத்திரிகையாளர் சந்திப்பு, தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்தது.இதில், நடிகர் பிரசாந்த் பேசியதாவது:வரும் 9ம் தேதி 'அந்தகன்' திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில், 400 தியேட்டர்களில் வெளியிட உள்ளோம். படத்தில், சிம்ரன், பிரியா ஆனந்த், நவரச நாயகன் கார்த்தி, சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.மிகுந்த பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தாதுன் படத்துக்கும், அந்தகன் படத்துக்கும் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம்.இது, 'ரீமேக்' படம் அல்ல. 'ரீ மேட்' படம். அப்பாவின் இயக்கம், பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ரசிகர்களுக்கு, இப்படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில், பார்வையற்றவராக நடித்தது சவாலாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.'வித்தியாசமான சிம்ரன்'திரைப்படத்தில் வித்தியாசமான சிம்ரனை காணலாம். நானும், பிரசாந்த்தும் 25 வருடங்களாக நண்பர்கள். பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு, இத்திரைப்படத்தில் நடித்துள்ளேன்.- நடிகை சிம்ரன்'விருந்து நிச்சயம் இருக்கு'அந்தகன் திரைப்படத்தில் நடித்தது மறக்க முடியாதது. இயக்குனர் தியாகராஜன் உழைப்பு பிரமிக்க வைத்தது. நட்சத்திர பட்டாளத்திடம் நிறைய வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு, இப்படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கப் போகிறது.- நடிகை பிரியா ஆனந்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை