உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தக்காளியில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

தக்காளியில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டத்தில், தக்காளி அதிக அளவு பயிரிடப்படுகிறது.தற்போது மழை பொழிவால், கிணத்துக்கடவு பகுதிகளில், விவசாயிகள் தக்காளி நடவு செய்ய துவங்கியுள்ளனர். இங்கு விளையும் தக்காளியில் ஏற்படும் நோய்களை தடுக்க, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை சார்பில், ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.தக்காளியில் ஊசி துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 16 வைக்க வேண்டும்.மேலும், வேப்ப விதை சாறு, 1 ஹெக்டேருக்கு 25 கிலோ அல்லது அசாடிராக்டின் 3 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இட வேண்டும் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து இட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை