உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரசாயன உரம் குறைக்க விவசாயிகளுக்கு அறிவுரை

ரசாயன உரம் குறைக்க விவசாயிகளுக்கு அறிவுரை

அன்னுார்;'ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்' என, விவசாயிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கதவுகரை கிராமத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) புனிதா தலைமை வகித்து பேசுகையில்,விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.வேளாண் பல்கலை உழவியல் துறை இணை பேராசிரியர் மருதாசலம் பேசுகையில், ''ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும். பசுந்தாள் உரம், பஞ்சகவ்யம், மண்புழு உரம், மீன் அமிலம், தாவர பூச்சி விரட்டிகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் மாரியப்பன் பேசுகையில்,இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் சக்தி தொடர்ந்து நீடிக்கும், என்றார்.துணை வேளாண் அலுவலர் ராஜன், உதவி வேளாண் அலுவலர் கவிதாஞ்சலி ஆகியோர் திட்டம் குறித்து விளக்கினர்.பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் கார்த்திக், பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ