| ADDED : ஜூன் 18, 2024 12:37 AM
கோவை;கே.எம்.சி.எச்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் பட்டமளிப்பு விழா, காளப்பட்டி ரோடு, டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மாநாட்டு மையத்தில் நடந்தது. கே.எம்.சி.எச்., நிர்வாக இயக்குனர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் துணை வேந்தர் நாராயணசாமி பேசுகையில், '' மாணவர்கள் தங்கள் கற்ற கல்வியை, மக்களுக்கு பயனுள்ள வகையிலும், பொது சுகாதார மேம்பாட்டிற்கும்பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.400 இளநிலை பட்டதாரிகளுக்கும், 90 முதுகலை பட்டதாரிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைஅளவில் தங்கம் பதக்கம் பெற்ற, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த, 50 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண், டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தவமணி, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், தலைமை இயக்க அதிகாரி நடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.