உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க அறிவுரை

பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க அறிவுரை

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், கிணத்துக்கடவு வட்டாரத்தில், அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டு வருகிறது. மற்ற வகை காய்கள் மற்றும் பயிர்கள் குறைந்த அளவே பயிரிடப்படுகிறது. இதில், விவசாயிகள் பலர் விவசாயத்தின் மகத்துவத்தை மாற்றி வருகின்றனர். இதை முறையாக பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.இதில், ஒரே மாதிரியான பயிர்களை பயிரிடுவதன் வாயிலாக, அதிக அளவு பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. இதைத்தவிர்த்து பயிர் சுழற்சி முறை பின் பற்ற வேண்டும். இதனால் பயிர்களில் பூச்சி தாக்குதல் கட்டுப்பட வாய்ப்புள்ளது.காலத்திற்கு ஏற்றவாறு பயிர்களை தேர்வு செய்து பயிரிடாவிட்டால், அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, தகுந்த பருவத்தில் பயிரிடுதல் அவசியமாகிறது.பயிர்களில் அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மண்ணின் வளம் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கிறது. எனவே, பாரம்பரிய பூச்சி கட்டுப்பாட்டு முறையான, உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப, விவசாயிகள் மாறாமல் இருந்ததால், விளைச்சல் குறைவாகவும், நோய் தாக்குதல் அடைந்தும் காணப்படுகிறது. இதை தவிர்க்க, எந்த பருவத்தில் எந்த பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என, விவசாயிகள் அறிந்திருப்பது அவசியமாகிறது.இதுகுறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி