| ADDED : ஆக 07, 2024 11:16 PM
கோவை, - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'மஞ்சப்பை படையணி' என்ற பெயரில், மஞ்சப்பை மின்சார மின்னணு இருசக்கர வாகன பிரசாரத்தை, அமைச்சர் முத்துசாமி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் ஒரு அங்கமாக, மஞ்சப்பை படையணியை துவக்கியுள்ளது. இதில் ஆறு ஊழியர்கள், ஆறு மின்னணு ஸ்கூட்டர்களை இயக்கி, பிரசாரம் மேற்கொள்வர்.இதன் வாயிலாக, ஒருமுறை பயன்படுத்தி எறியும் பாலிதீன் பொருட்களுக்கான தடை மற்றும் சுற்றுச்சூழல் மாற்று பொருட்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பயன்படுத்தி வீசி எறியும் நெகிழி மீதான தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சந்திரசேகர், ராமச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் லாவண்யா, செந்தில்குமார், சதீஸ்குமார், மோகன ஜெயவள்ளி, அபூபக்கர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.