மேலும் செய்திகள்
கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி
08-Mar-2025
கிணத்துக்கடவு; கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள், கிணத்துக்கடவில் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள், கிணத்துக்கடவில் 2 மாத காலம் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், நேற்று வேளாண் மாணவர்கள், கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவியை சந்தித்து கலந்துரையாடினர்.இதில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் என்னென்ன பயிர்கள் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிகளவு விளையும் பயிர்கள், பயிர்களில் ஏற்படும் நோய் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பயிர்களுக்கான ஆலோசனைகள், பாதுகாப்பு, உரம் இடுதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
08-Mar-2025