உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையில் என்ன பயிரிடலாம் ;வேளாண் துறை அறிவுரை

கோடையில் என்ன பயிரிடலாம் ;வேளாண் துறை அறிவுரை

அன்னுார்:'கோடை பருவத்தில் நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்,' என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை : கோடை பருவத்தில் நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் பயிர் சுழற்சி மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி வாயிலாக, மண்வளம் அதிகரிக்கும். பூச்சி நோய் தாக்குதல் குறைந்து, மகசூல் அதிகரிக்கும். கோடை பருவ சாகுபடி செய்ய, உகந்த, சோளம், கம்பு, பயறு வகை பயர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டப்பயிறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். பயறு வகை பயிர்கள் வளிமண்டல நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் சேமிக்கிறது.இதனால் பயிர் வளர்ச்சி சீராகும். அதிக மகசூல் கிடைக்கும். தழைச்சத்து தேவை குறையும். ஒவ்வொரு பயிருக்கும் வேரின் வளர்ச்சி மற்றும் வேரின் ஆழம் ஆகியவை வேறுபடுவதால் அடுத்து சாகுபடி செய்யப்படும் மாற்றுப் பயிருக்கு நல்ல வேர் வளர்ச்சி அதிகரிக்கும். கூடுதல் மகசூல் கிடைக்கும். நிலக்கடலை பயறு வகைகளில் உழவு பணி எளிதாக இருக்கும். அடுத்த மகசூல் செய்வதற்கு வளர்ச்சி நன்றாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை