| ADDED : மே 30, 2024 05:02 AM
கோவை : கோவை மாவட்டத்தில் சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்துக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்களை அதிகம் உற்பத்தி செய்வது, இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, கோவை மாவட்டத்தில் மானியம் மற்றும் தொழில் நுட்ப உதவிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.விவசாயிகள் இது குறித்த கூடுதல் விவரங்கள் பெற, வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அல்லது மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க ஆலோசகர்களை, 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.