உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணியிடம் ஒதுக்கீடு

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணியிடம் ஒதுக்கீடு

- நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக, 12,728 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,540 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வரும், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளநிலையில், சுழற்சி முறையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.முதல் கட்டமாக கடந்த மார்ச் 21ம் தேதி, சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடைபெற்றது.இரண்டாம் கட்டமாக, 12,728 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உட்பட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை