மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
3 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
3 hour(s) ago
தேசிய நூலக வார விழா
3 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
3 hour(s) ago
அன்னூர்:'அன்னூரில் ஆக்கிரமிப்புகளை நான்கு நாட்களுக்குள் அகற்றாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என பேரூராட்சி எச்சரித்துள்ளது. கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அவிநாசி -- மேட்டுப்பாளையம், மாநில நெடுஞ்சாலைக்கு மையமாக அன்னூர் உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் அன்னூரை கடந்து செல்கின்றன. அன்னூர் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் சாலை, கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அவிநாசி மாநில நெடுஞ்சாலையை தற்காலிக கடைகள், விளம்பர போர்டுகள் ஆக்கிரமித்துள்ளன. பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தனிநபர் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன.இதனால் வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்கள் சாலை ஓரம் நடந்து செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள, பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.'ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிக் கொள்ளாவிட்டால், நான்கு நாட்களில் போலீஸ் பாதுகாப்போடு அகற்றப்படும்' என பேரூராட்சி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago