| ADDED : ஆக 16, 2024 08:40 PM
கோவை:கோவை இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி மாதம் ஐந்தாம் வெள்ளியான நேற்று அம்மன் தீர்த்த குட நீர் மஞ்சளபிஷேக விழாவை ஏற்பாடு செய்தனர். செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு எல்லை கருப்பராயன் கோவில் வரை மஞ்சளபிஷேக ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தில் பக்தர்கள் தீர்த்த குடத்தை தலையில் வைத்துக்கொண்டு, அம்மனின் பக்தி சரணங்களை பாடி மகிழ்ந்தனர். உலகம் நலம் பெறவும், விவசாயம் செழிக்கவும் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில், அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அம்மனை வேண்டி, 300க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கற்றனர். நிகழ்வில், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, செயற்குழு உறுப்பிர் சஸ்மிதா அம்பிகாவதி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ், மாவட்டத்தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.