உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரங்களை நடு; மனதில் கவலைகளை விடு! வன மகோத்சவ விழாவில் விழிப்புணர்வு

மரங்களை நடு; மனதில் கவலைகளை விடு! வன மகோத்சவ விழாவில் விழிப்புணர்வு

பொள்ளாச்சி, - 'மண்ணில் மரங்களை நடு; மனதில் கவலைகளை விடு,' என அரசுப்பள்ளியில் நடந்த வன மகோத்சவ விழாவில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வனமகோத்சவ விழா கொண்டாடப்பட்டது.வனத்தை பாதுகாக்க பசுமையை பாதுகாப்போம்; காற்றை விலை கொடுத்து வாங்காமல் இருப்போம். காகிதம் தரும் மரத்தை ஆயுதம் கொண்டு தாக்காதே; மரம் வளர்ப்போம் மனிதம் நேசிப்போம், என, விழிப்புணர்வு வாசகங்களை கூறி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து, ஓவியக்கண்காட்சியில், மரங்களை வெட்டுவது மனிதர்களின் நிழல்களை வெட்டுவதற்கு சமம், மரங்களை வெட்டுவது கருவில் உள்ள குழந்தையை கொல்வதற்கு சமம்; மரங்களை வெட்டுவது மனிதர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தாங்களே வெட்டுவதற்கு சமம் போன்ற கருத்துகளை விளக்கும் வகையில், பல்வேறு படைப்புகள் இடம் பெற்று இருந்தன.பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்களுடன் முருங்கை மரம், புங்கை மரம், அரளி, செம்பருத்தி, மரக்கன்றுகள் நடப்பட்டன.தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா பேசியதாவது:ஒரு மரம், 50 ஆண்டுகள் சராசரி ஆயுளில் ரூபாய், 50 லட்சம் மதிப்புள்ள நம் உயிர் வாழ தேவையான பிராண வாயு உற்பத்தி செய்கிறது. காற்றை மாசுபடாமல் தடுக்கும், மண்வளத்தை பெருக்கியும், மண்ணரிப்பை தடுக்கிறது.மனிதனுக்கு நிழலாகவும், பறவைகள், விலங்குகள் தங்குவதற்கு வீடாகவும், சுவையான பழங்களையும், வாசமுள்ள மலர்களையும் தருகிறது. விலைமதிப்பில்லாமல் மழை பெற மரங்கள் தேவை.மண்ணில் மரங்களை நடு; மனதில் கவலைகளை விடு, மரங்கள் இருந்தால் இன்பம், மரங்கள் மறைந்தால் துன்பம். எனவே, மரங்களை பாதுகாப்போம்.இவ்வாறு, பேசினார்.மேலும், பசுமை அரிச்சுவடி பாடல், சுற்றுச்சூழல் திருக்குறள், விண்ணை நேசிக்கும் மரங்கள் கவிதைகள் மாணவர்களுக்கு கூறி மரங்கள் வளர்ப்பின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ