உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழலையருக்கு உற்சாக வரவேற்பு

மழலையருக்கு உற்சாக வரவேற்பு

கோவை:மேட்டுப்பாளையம் ரோடு, சிறுமுகை, நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலையர் பிரிவு திறப்பு விழா மற்றும் புதிய கல்வியாண்டுக்கு, மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. மாணவர்களை வரவேற்கும் வகையில், பள்ளி வளாகம் முழுவதும் வண்ண பலுான்கள், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து, பள்ளி ஆசிரியர்களுடன் பல்வேறு செயல்திட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 'மகிழ்ச்சியான பெற்றோர்' என்ற பெயரில், குழந்தைகளின் உளவியல் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் பள்ளி தினத்தை நினைவுகூறும் வகையில், குழந்தைகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை