உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலக்கிய அமுதம் பருக அழைப்பு

இலக்கிய அமுதம் பருக அழைப்பு

கோவில்பாளையம்:கோவில்பாளையத்தில் தமிழ் சங்க விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது.கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கிய நிகழ்வு, வரும் 21ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவில்பாளையம், இன்போ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., வெள்ளிங்கிரி தலைமை வகித்து பேசுகிறார். 'படித்ததில் பிடித்தது', 'அறிவோம் ஒரு அரிய செய்தி' குறித்த தலைப்புகளில் புலவர்கள் பேசுகின்றனர்.ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனசுந்தரம், 'புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும்' என்னும் தலைப்பில் பேசுகிறார். ஓய்வு பெற்ற பேராசிரியர் சூரிய நாராயணன் சிறப்புரையாற்றுகிறார். தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று, இலக்கிய அமுதம் பருக, தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை