உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலை - நல்லாறு திட்டம்: மத்திய அமைச்சரிடம் பா.ஜ.,மனு

ஆனைமலை - நல்லாறு திட்டம்: மத்திய அமைச்சரிடம் பா.ஜ.,மனு

போத்தனூர்: ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ , சார்பில் மத்திய அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ஆனைமலை - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக, வாக்குறுதி அளித்தார். மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்த வசந்தராஜன், ஆனைமலை - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், விவசாயிகளிடம் கொப்பரைகளை வாங்கி தேங்காய் எண்ணெய் தயாரித்து, ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யவேண்டும் என, குறிப்பிட்டு மனு கொடுத்தார். மாவட்ட பார்வையாளர் மந்த்ராசலம், பொது செயலாளர் துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை