உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆண்டாள் ஆடிப்பூர விழா

ஆண்டாள் ஆடிப்பூர விழா

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரி நகரில் ஆண்டாள் பிறந்தநாள் ஆடிப்பூர விழா கொண்டாட்டம் நடந்தது.நிகழ்ச்சியில், ஆண்டாள் பெருமைகளை எடுத்துக் கூறி, ஆண்டாள் வாழி திருநாமம் போற்றி, ஆண்டாள் ஆடிப்பூர விழாவை பக்தர்கள் சிறப்பாக கொண்டாடினர். பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூர விழாவை ஒட்டி ஆண்டாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஆண்டாள் ஆடிப்பூர விழா கொண்டாட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ