உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலங்குகள் நல ஆர்வலர் புகார் நாயை கொன்ற நால்வர் கைது

விலங்குகள் நல ஆர்வலர் புகார் நாயை கொன்ற நால்வர் கைது

கோவை: தெரு நாய் மீது கல்லை போட்டு கொன்ற நான்கு பேரை, சிங்காநல்லுார் போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.சாய்பாபாகாலனி, கே.கே.புதுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,28. விலங்குகள் நல ஆர்வலரான இவரிடம், வக்கீலான சுரேஷ் என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சவுரிபாளையம் ரோடு, ராஜா நகர், 3வது வீதியில் தெரு நாய் ஒன்று இறந்து கிடப்பதாக, தகவல் அளித்துள்ளார்.அங்கு பாலகிருஷ்ணன் சென்றபோது, சின்னவேடம்பட்டி, சிந்து நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் வெடியப்பன்,45, பாலய்யா மகன் வெடியப்பன்,38, மாதேஷ், 19, மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த செல்வராஜ்,48, ஆகியோர் நாய் மீது கல்லை போட்டு கொன்றது தெரிந்தது.இதுகுறித்து, பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்