உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதில் சொல்லுங்கள்! மின்கம்பி அறுந்து விழுவதால் விபத்து; மின்வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

பதில் சொல்லுங்கள்! மின்கம்பி அறுந்து விழுவதால் விபத்து; மின்வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவை: மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக, தொடரப்பட்ட பொது நல வழக்கில், இரு வாரங்களுக்குள் மின் வாரியம் அறிக்கை சமர்ப்பிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை சரவணம்பட்டியில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், ஒரு சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், மே மாதம் நடந்தது.சில மாதங்களுக்கு முன், கன மழை பெய்தபோது, மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், லங்கா கார்னர் பகுதியில், இரு சக்கர வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்திய கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர், அவ்விடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தது தெரியாமல், சம்பவ இடத்திலேயே, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இவ்விரண்டு சம்பவங்களும் கோவையில் நடந்த உதாரணம். இவை போல், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், மின்சாரம் தாக்கி பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

10,718 பேர் மரணம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில், 2001 முதல், 2023 செப்., வரை, 10 ஆயிரத்து, 718 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதில், மின் கடத்தி துண்டானதால் மட்டும், 2,041 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.மின் கம்பங்களில் இணைப்பு கொடுத்துள்ள, மின் கம்பிகளில் முறையான 'எர்த்திங்' மற்றும் 'கார்டிங்' பாதுகாப்பு நடவடிக்கைகள், மின்வாரியத்தால் செய்யாத காரணத்தால், மின்கடத்தி துண்டாகும்போது, மின் கம்பிகள் அறுந்து விழுகின்றன. அதை அறியாமல் பொதுமக்கள், விலங்குகள் தொடும்போது, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

மரணங்களை தடுத்திருக்கலாம்

மின்வாரியம் வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகள் செய்திருந்தால், இதுபோன்ற மரணங்களை தடுத்திருக்கலாம்.சில தருணங்களில் மின் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மின்வாரியம் அறிவுறுத்துகிறது. அதற்கு முன்னரே செய்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். இதுபோன்ற மரணங்கள் நிகழும்போது, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே மனுதாரர்களில் சிலருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' என்கிற அமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதை விசாரித்த கோர்ட், இரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில், 2001 முதல், 2023 செப்., வரை, 10 ஆயிரத்து, 718 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதில், மின் கடத்தி துண்டானதால் மட்டும், 2,041 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பொதுநல வழக்கு

'கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், ''மின் விபத்து ஏற்படாமல் இருக்கவும், மக்களின் உயிரை காக்கவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை கோரி, மின்வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம்; ஒன்பது மாதங்களாகியும் எந்த பதிலும் அளிக்காததால், கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை மின்வாரியம் முறையாக பின்பற்றி, கோர்ட்டில் அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் தொடர்ந்து கண்காணிக்க கோரியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ