உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடை திட்ட  பணியை விரைந்து முடிக்குமாறு முறையீடு

பாதாள சாக்கடை திட்ட  பணியை விரைந்து முடிக்குமாறு முறையீடு

கோவை:பீளமேடு செங்காளியப்பன் நகரில் யு.ஜி.டி., பணிகளை, விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு, 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா அனுப்பியுள்ள மனுவில், 'பீளமேடு, செங்காளியப்பன் நகரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் (யு.ஜி.டி.,) துவங்கி, 10 நாட்கள் மட்டுமே நடந்தது. குழாய் பதிக்கும் பணிகள் பாதி முடிந்த நிலையில் தோண்டி போடப்பட்ட ரோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.'இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். மழை காலங்களில் கனரக வாகனங்கள் குழிகளில் சிக்கி பொக்லைன் இயந்திரம் வாயிலாக அப்புறப்படுத்தப்பட்டது. ஆகவே, இப்பணிகளை விரைந்து முடித்து, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி