உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படுகிறதா?

ஊராட்சிகளில் குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படுகிறதா?

பொள்ளாச்சி:ஊராட்சிகளில், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், முறையாகச் சுத்தம் செய்யப்படுகிறதா என்பது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்டு, 118 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களில் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகப்படியான குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், சில ஊராட்சிகளில், மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளை முறையாக சுத்தம் செய்வதில்லை என, புகார் எழுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால், மேல்நிலைத் தொட்டிகளை அவ்வபோது, முறையாக பராமரிப்பு செய்து, தேவையான அளவு குளோரின் கலந்து, குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.கிராம மக்கள் கூறியதாவது:ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, நன்கு உலர வைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.ஆனால், சில ஊராட்சிகளில் பெயரளவில் மட்டுமே தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்த நாள் குறித்த விபரம், தொட்டிகளில் குறிப்பிடுவதும் கிடையாது. ஊராட்சி அதிகாரிகள் குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்வதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ