உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 5,000 ரூபாய் கேட்டு காலி பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

5,000 ரூபாய் கேட்டு காலி பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

கோவை:பணம் கேட்டு தராத ஆத்திரத்தில், காலி பீர் பாட்டிலால் சமையல் பணியாளரை தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல், எரியோடு பகுதியை சேர்ந்தவர் கரிகாலன்,32. இவர் கோவை லங்கா கார்னரில் உள்ள கடையில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடன் பழநி, நெய்க்காரபட்டியை சேர்ந்த பாசில் அகமதுவும்,33, சமையல் வேலை செய்து வருகிறார்.கடந்த, 22ம் தேதி இருவரும் டவுன்ஹாலில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது பாசில் அகமது, கரிகாலனிடம் ரூ.5,000 கேட்டு தகராறு செய்துள்ளார். தரமறுத்த கரிகாலனின் கழுத்தில், பாசில் அகமது காலி பீர் பாட்டிலால் தாக்கினார். காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் கரிகாலன் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து, பாசில் அகமதுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை