உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீடி கேட்டு தகராறு: ரவுடீசம் செய்த மூவர் கைது

பீடி கேட்டு தகராறு: ரவுடீசம் செய்த மூவர் கைது

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப், அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே ரவுடீசம் செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவை சேர்ந்தவர் முருகேசன், 48, ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் (29ம் தேதி) இரவு, 11:30 மணிக்கு, கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, கிணத்துக்கடவை சேர்ந்த ராஜ்குமார், 24, கவியரசு, 19, மற்றும் கோவையை சேர்ந்த ஆகாஷ், 25, ஆகிய மூவரும் முருகேசனிடம் பீடி கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும், தகாத வார்த்தையில் திட்டி கல்லால் தாக்கியுள்ளனர்.கொண்டம்பட்டியை சேர்ந்த வீரகுமார் தடுத்த போது, கவியரசு தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து வீரகுமாரின் கை மற்றும் தலையில் தாக்கினார். இதை கவனித்த அன்பழகன் (ஆட்டோ ஓட்டுநர்) தட்டி கேட்டார். அப்போது, அன்பழகனின் ஆட்டோ கண்ணாடியை ஆகாஷ் உடைத்தார்.இதில், காயம் அடைந்த முருகேசன், வீரகுமாரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கிணத்துக்கடவு போலீசார் இவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை